கொரோனா 3ம் அலையை எதிர்கொள்வது குறித்து… தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

கல்வி தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona desiya asiriyar sangam - 2026

தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காணொளி வழியாக இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 150 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டனர். இதில்,
கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மு.கந்தசாமி குறிப்பிட்டது…

தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில அளவிலான மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கி சிறப்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஞ்ஞானிகளின் மற்றும் ICMR கணிப்புப் படி கொரோனாவின் மூன்றாவது அலை ஒரு வேளை ஏற்படும் பட்சத்தில் அது குறித்த முன்னேற்பாடுகள், பொதுமக்களுக்கு செய்யவேண்டிய விழிப்புணர்வு நிவாரணப் பணிகள் & சேவைகள் எவ்வாறு செய்வது என்பது பற்றி விரிவாக திட்டமிட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா கால பொது முடக்கத்தால் கல்வியில் பின்னடைவு ஏற்படாதவாறு கல்வித் தொலைக்காட்சி குறித்த போதிய விழிப்புணர்வு மற்றும் ஊடகத்தின் வாயிலாக எளிதாக கற்றல் – கற்பித்தல் பணி செய்தல் எவ்வாறு? என்ற கருத்துக்களும், அவரவர் பகுதிகளில் சமூக இடைவெளி பின்பற்றி தன்னார்வலர் மூலம் கல்விப்பணி தொடங்க உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், நம் பாரத நாட்டின் பண்டைய கொள்கையான ஆடி மாதம் வரும் குருபூர்ணிமாவை ஒட்டி குருவணக்கம் செய்யும் நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது எனவும் இதன் மூலம் அறநெறி சார்ந்த பாரதீய கல்வி முறையின் அவசியம் உணரப்பட்டு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னதப் பணியில் ஆசிரியர் சமூகம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.