சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு… இப்போதே விண்ணப்பியுங்கள்!

இந்திய மருத்துவ படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் ஆகஸ்டு-14 ஆதி முதல் வினியோகிக்கப்படுகிறது. இந்தியர் மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது

இதையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி இந்திய முறை மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.யு.எம்.எஸ்., மற்றும் பி.எச்.எம்.எஸ்., பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த 14 ஆம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது

இதை கடந்த 14ம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் பெறலாம்

இது பற்றிய விவரங்களை www.tnhealth.org இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்பபடிவங்களை இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 5ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது.