jobs - 2026

இந்திய வனத்துறையில் பணி!

வேலைவாய்ப்பு லைஃப் ஸ்டைல்
jobs - 2026

இந்திய வனத்துறையில் காலியாக உள்ள வன பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் என 45 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே ஆர்வமும், தகுதயும் உள்ளவர்கள் வருகின்ற மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்திய வனத்துறையில் காலிப்பணியிட விபரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 45

Conservator of Forest பணிக்கானக் காலிப்பணியிடங்கள் – 25

Deputy Conservator of forest பணிக்கான காலிப்பணியிடங்கள் – 20

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://icfre.gov.in அல்லது https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, அதற்கு தேவையான அனைத்துச் சான்றிதழ்கள் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary,
Indian Council of forest Research and Education,
P.O New Forest,
Dehradun- 248006

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி – 30.05.2022

விண்ணப்பக்கட்டணம்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வனத்துறையில் வன பாதுகாவலர் மற்றும் துணை வன பாதுகாவலர் பணிக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://icfre.gov.in/vacancy/vacancy620.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.