ஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்!

Published:

pushpasrivani - 2026

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படத்திற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் நடிகராக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒருவர் புஷ்பா ஸ்ரீவாணி. பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவர் தற்போது நடிகையாகி திரைபடத்தில் நடிக்க உள்ளார்.

pushpa sri vani - 2026

பக்ருதி அதிதி தேவோ பவா என்னும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் “அம்ருத பூமி” ஆனந்த் என்பவர் இயக்கும் இந்தப் படமானது, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக உருவாக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

ஒரு பழங்குடியினர் நலத்துறை பள்ளியிலும், அருகில் உள்ள வயல்களிலும் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் பங்கேற்று நடித்தார்.

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாகும் வகையில் படத்தின் கதை அமைநதுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img