இளம்பெண் கடத்தல்! 9 பேர் காரில் வைத்து வன்கொடுமை!

Published:

vankodumai 1 - 2026

இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, ரோட்டில் வீசிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் உள்ள படர்காட் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், உடல் நலமில்லாத மகளை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவரை பார்த்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்,

ரிக்‌ஷாகாரர் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தவர். இந்நிலையில் வழக்கமான வழியை விட்டுவிட்டு, ரிக்‌ஷா வேறு வழியில் சென்றதால், சந்தேகமடைந்த அந்தப் பெண், வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார்..

வழக்கமாகச் செல்லும் சாலையில் ஏதோ பிரச்னை என்பதால் இந்த வழியில் போவதாகக் கூறியுள்ளார் ரிக்‌ஷாக்காரர். சிறிது தூரம் சென்றதும் நான்கைந்து பேர் அதில் ஏறினர். அவர்கள் அந்தப் பெண்ணின் வாயை பொத்தி, கையை கட்டினர்.

vankodumai 3 - 2026

பின்னர் மற்றொரு வாகனத்துக்கு கடத்தினர். அந்த வாகனம் நர்சிங்கார் என்ற இடத்துக்குச் சென்றது. ஓடும் வாகனத்திலேயே அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சுமார் 9 பேர் இந்த கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள், அந்தப் பெண்ணை சாலையில் வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

நடுரோட்டில் மயங்கி கிடந்த அந்தப் பெண் பற்றி, அந்த வழியாகச் சென்றவர்கள் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஆட்டோர் ரிக்‌ஷா ஓட்டுநர் பிரதீப் தாஸ், ராதாப் தாஸ், அஜோய், உட்பட ஆறு பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

அகர்தாலாவில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறையை கண்டித்துள்ள எதிர்க்கட்சி பெண்கள் அமைப்புகள், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img