ராமஜன்ம பூமியில் ராமர் கோயில்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
ramajanmaboomi4 - 2026

அயோத்தி ராமஜன்ம பூமியில் ஆலயம் அமைப்பதற்கான தடங்கல்கள் சட்ட ரீதியாக நீங்கியுள்ளன என்று கருத்து தெரிவித்து வருகின்றனர், ராமர் ஆலயம் அமைக்கப் பட வேண்டும் என்று போராடியவர்கள்.

அயோத்தியில் ராமர் ஆலயம் அமைந்திருந்த பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம், தங்களுக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடிய மூன்று அமைப்புகளின் மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

அயோத்தி வழக்கின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: முக்கிய அம்சங்கள்.

  1. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி.
  2. பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு.
  3. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும்.
  4. மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு.
  5. சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாராவின் மனுக்கள் தள்ளுபடி.
  6. கோவில் தரப்பிற்கு நிலத்தின் உரிமை வழங்கப்பட்டது. மசூதி தரப்பிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டது.
  7. அயோத்தி ஆலயம் அமைந்துள்ள நிலம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அறக்கட்டளை மூலம் ஆலயம் அமைக்கப் படவேண்டும் என்று கூறியுள்ளது நீதிமன்றம்.
ramajanmaboomi1 - 2026

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா என்கிற அமைப்பிற்கே சொந்தம். இதில் உரிமை கொண்டாடிய, ஷியா வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளுக்கு எந்த உரிமையும் இல்லை.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி. அயோத்தி நிலத்தை இந்து அமைப்புகளுக்கு நிபந்தனையுடன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் ! 3 மாதத்திற்குள் அறக்கட்டளையை நிறுவி முஸ்லீம்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் ! அறக்கட்டளையில், நிர்மோகி அகாரா இடம்பெற வேண்டும். அதற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். .. என்று குறிப்பிட்டுள்ளது.

advocate paracharan - 2026

இதனிடையே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்; அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ரானஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. தமது 92 வயதில் இதுதான் தனது இறுதி வழக்கு என்று கூறி வாதாடிய வழக்கறிஞர் பராசரன் அவர்களுக்கு வணக்கம் .. என்று கூறி, சமூகத் தளங்களில் பராசரனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் சிலர்.

அதே போல், இந்த வழக்கில் தமது தரப்பில் சில தகவல்களை எடுத்துக் கொடுத்து உறுதியாக நின்ற பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமியையும் சிலர் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.