fire in - 2026

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள ரகுவீர் ஜவுளிக் கடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

முதல் தளத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலிஸ்டர் ரக ஜவுளி அதிகம் இருந்ததால் தீ எளிதாகப் பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending