சிங்க கூட்டத்தின் நடுவே பிறந்த சிங்ககுட்டி!

Published:

lion - 2026

நான்கு புறங்களிலும் சிங்கங்கள் சூழ்ந்துகொண்டதால் ஆம்புலன்ஸிலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளார் பெண் ஒருவர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சரியான போக்குவரத்து வசதி கிடைக்காமல் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு தவித்து வருகின்றனர்.

குஜராத்தின் சோம்நாத் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளனர். அதனை அடுத்து, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண்.

child 1 - 2026

காட்டுப்பகுதி வழியாக சென்றபோது, திடீரென 4 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சுற்றிவளைத்துக்கொண்டது. இதனால் ஆம்புலன்ஸை நிறுத்தியுள்ளார் ஓட்டுநர். ஆனால், கர்ப்பிணிக்கு வயிறு வலி அதிகரித்துக்கொண்டே இருந்ததால் அங்கிருந்த செவிலியர் இருவர் மருத்துவருக்கு அழைத்து அவரது அறிவுரையின்படி பிரசவம் பார்த்துள்ளார்.

தாய் மற்றும் குழந்தை இருவருமே நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸை விட்டுச்சென்றபின் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு குழந்தையும் தாயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருமே நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img