பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி!

Published:

india china
i

நேற்று இரவு இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயற்சி செய்துள்ளதாகவும், பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்துள்ளதாகவும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டு இருக்கிறது .

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் நிலவி வருகிறது. கடந்த மே மாதம் லடாக் மற்றும் சிக்கிம் அருகே சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது எல்லையில் சின்ன மோதல் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து லடாக் பகுதியில் மோதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அதிலும் கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா – சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் அதன்பின் ஜூலை 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க ஒப்புக்கொண்டது. 2 கிமீ தூரத்திற்கு எல்லையில் படைகளை வாபஸ் வாங்க இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது. ஆனால் லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் சில இருந்தது. அங்கு லேசான பதற்றம் நிலவி வந்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img