india in paralympics
india in paralympics
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாரா ஒலிம்பிக் – 4 செப்டெம்பர் 2021 – இந்தியா இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றது

பாட்மிண்டன் வீரர் பிரமோத் நேற்று தங்கப் பதக்கம் பெற்றார். இதே விளையாட்டில் வெண்கலப் பத்தக்கத்தினை மனோஜ் சர்கார் பெற்றார்.

19 வயதான, இடது கையால் சுடுகின்ற மணீஷ் நர்வல் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் P4 பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார். இது இவரின் முதல் பாரா-ஒலிம்பிக் போட்டி. இதே போட்டியில் சிங்கராஜ் அதானா வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

இன்று (5 செப்டெம்பர்) அதிகாலை நடந்த போட்டியில் உத்திரப்பிரதேச மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, சுஹாஸ் யதிராஜ் பாட்மிண்டன் போட்டி ஒன்றில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending