பெண்களை இந்து பெண் கடவுள் காளியுடன் ஒப்பிட்டுள்ள
மத்திய அமைச்சர் மற்றும் அசன்சால் எம்.பி. பாபுல் சப்ரியோ, பெண்கள் தங்கள் குடும்பத்தை சமூக எதிர்ப்பு சக்திகளிடம் இருந்து காப்பாற்ற கையில் கத்தி வைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மேற்கு பர்தான் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாரதீய ஜனதா கட்சி அமைச்சர், மக்கள் தங்கள் உரிமைகளுக்காக சமூக எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.