குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை அழைத்து கவர்னர் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari