கேரளாவில் ‘ராமாயண மாதம்’ எனப்படும் ஆடி மாதத்தில் ராமர், பரதன், லட்சுமணன், சத்துருகனன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நான்கு கோயில்களில், ஒரே நாளில் தரிசனம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. இவ்வாறு தரிசனம் செய்வது ‘நாலம்பல தரிசனம்’ என அழைக்கப்படுகிறது.
இன்று முதல் ஆகஸ்ட் 16 வரை ஒரு நாளில் இக்கோயில்களில் தரிசனம் செய்யலாம். பக்தர்களுக்காக இக்கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சூர் அருகே திருப்பரயாறில் ராமர் கோயில், இரிஞ்ஞாலக்குடாவில் பரதன், மூழிக்குளத்தில் லட்சுமணன், பாயம்மலில் சத்துருக்கனன் கோயிலும் உள்ளன. திருச்சூர் அருகிலேயே கோயில்கள் இருப்பதால் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
இரிஞ்ஞாலக்குடா பரதன் கோயில் நிர்வாகிகள் கூறுகையில், ‘இக் கோயில் ‘கூடல் மாணிக்கம் கோயில்’ என அழைக்கப்படுகிறது.இரவு 3:00 மணிக்கு நடை திறந்து காலை 11:30 வரை; மாலை 5:00 முதல் இரவு 8:00 வரை திறந்திருக்கும். வயிறு பிரச்னை உள்ளவர்கள் கத்தரிக்காய் நிவேத்யம் செய்து வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை. தமிழக பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர்.
விபரங்களுக்கு 0480 -282 6631ல் தொடர்பு கொள்ளலாம்’ என்றனர்.