செல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்!

Published:

07 June18 Ramadoss - 2026

கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி

– அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை மறக்க வைப்பீராக! – என்று கிண்டல் அடித்துள்ளார் ராமதாஸ்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது  டிவிட்டர் பதிவில், கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், மதுரைக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

முன்னதாக, மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில், மஹாராஷ்டிராவில் உள்ள புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் திருச்சி 12வது இடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் கவலையின்றி வாழ்க்கை நடத்துதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் திருச்சியே முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத் தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் பிடித்தன. ஆந்திர மாநிலம் திருப்பதி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர், மஹாராஷ்டிர மாநிலம் தானே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

தமிழக நகரங்கள் முறையே திருச்சி 12; சென்னை 14; கோவை 25; ஈரோடு 26; மதுரை 28, திருப்பூர் 29 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் நாட்டின் தலைநகர் புதுதில்லி 65 ஆவது இடத்தை பிடித்தது. 111 நகரங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img