சீமான் தலைமையில் கேரளாவிற்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினரிடம் கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கேரள மக்களுக்கு உதவிகளைச் செய்யும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களை சேகரித்து கொண்டு நேற்று மாலை 6 மணி அளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு சென்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படம் இருந்த பதாகைகள் இருந்துள்ளன. இதனைக் கண்ட போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இட்டுச் சென்றனர். அங்கே சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.