பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இந்து விரோத அரசாங்கம் நடைபெறுவதாக உணர்வு ஏற்படுவதாக கூறினார். பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசே காரணம் என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு தான் காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.