5 மாநில சட்ட மன்றத் தேர்தல்: 3ல் காங்கிரஸ் முந்துகிறது! பாஜக.,வுக்கு பின்னடைவு!

Published:

Rahul Gandhi Narendra Modi - 2026

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ளது.

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக.,வை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்று வருகிறது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றிமுகத்தில் உள்ளதால், தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, இந்த வெற்றி குறித்து விவரிக்க செய்தியாளர்களைச் சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

இன்று பிற்பகல் 1 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ராகுல்.

5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் தலைமையிலான டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்கிறது.

5 மாநில சட்டசபை தேர்தல்: முன்னிலை நிலவரம்…

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்
காங்கிரஸ் – 53
பாஜக – 26
பகுஜன் சமாஜ் – 9

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

மிசோரம் சட்டசபை தேர்தல்
காங்கிரஸ் – 8
எம்என்எஃப் – 27
பாஜக – 1

தெலுங்கானா சட்டசபை தேர்தல்
டிஆர்எஸ் – 86
காங்கிரஸ் கூட்டணி – 21
பாஜக – 5

5 மாநில சட்டசபை தேர்த

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img