15 July12 Rajnath singh - 2026

புது தில்லி: தெலங்கானா, மிசோரமில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது; மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

5 மாநில சட்டசபைத் தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரசும், தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், மிசோரமில் எம்என்எப் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. ம.பி.,யில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவரிடம், மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், மாநில அரசுகளின் செயல்பாடுகள் அடிப்படையில் தான் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending