amith sha press conference - 2026

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அடுத்து இது குறித்து கருத்து தெரிவிக்க செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா. அப்போது அவர் கூறியவை…

ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது.

ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் உண்மை வென்றது. மக்களை தவறாக வழி நடத்த முயன்ற காங்கிரஸ் தோற்றுள்ளது-அமித்ஷா.

உச்சநீதிமன்ற தீர்ப்பு பொய்யை பரப்பும் காங்கிரசுக்கு கிடைத்த கிடைத்த அடி.

ரபேல் போர் விமானம் கொள்முதல் பற்றி பரபரப்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending