modi tribute vajpayee - 2026

நவபாரதச் சிற்பி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி சிரத்தாஞ்சலி செய்தனர்.

தில்லி ராஷ்ட்ரீய ஸ்ம்ருதி ஸ்தல் பகுதியில், மறைந்த

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவகம் அமைக்கப் பட்டுள்ளது. டிச.25 இன்று வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர்

ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய

நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர், இந்த இடத்துக்கு காலை வந்திருந்தனர். பாஜக தலைவர் அமித்ஷா, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் இசை நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending