sabarimalai without people3 - 2026

சபரிமலை நடை அடைக்கப்படுகிறது என்று தந்திரி தீர்மானம் அறிவித்துள்ளார். இதை அடுத்து சபரிமலை நடை அடைக்கப்பட்டுள்ளது. எப்போது நடை திறக்கப் படும் என்று தெரிவிக்கப் படவில்லை!

இன்று காலை பிந்து, கனகதுர்கா இரு பெண்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்யும் போர்வையில், சபரிமலை பாரம்பரியத்தைத் தகர்க்கும் நோக்கில் சென்றனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டது.

இந்நிலையில், சபரிமலை நடை அடைக்கப்படுவதாக தந்திரி கூறியுள்ளார். முன்னதாக சபரிமலை தந்திரி பெண்கள் யாரேனும் சபரிமலைக்குள் வந்தால், நடை அடைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,சபரிமலையில் ஆசாரங்கள் தகர்க்கப்பட்டதால் கோயில் நடை மூடப்படும் என்று தந்திரிஅறிவித்தார். அதன்படி இன்று காலை இரு பெண்கள் சபரிமலை சந்நிதிமுன் நுழைந்த நிலையில், பரிகார பூஜைகள் செய்வதற்காக முடிவு செய்துள்ளார்! இந்த தீர்மானத்தை அவர் இன்று காலை அறிவித்தார்,

அதன்படி இன்று நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. சந்நிதி சுத்தி பூஜைகள் நடைபெறவுள்ளன. மீண்டும் நடை ஜன.12ம் தேதிதான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending