bjp president remanded savesabarimala arrested - 2026

சபரிமலை விவகாரம் கேரளத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை மரபுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஒவ்வொரு நாளும் போராட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

ஊர்வலம் செல்பவர்களை போலீஸார் ஒருபுறம் கைது செய்து கொண்டிருக்க, மறுபுறம் கம்யூனிஸ்ட் இயக்க குண்டர்கள் கற்களை வீசியும் அடித்தும் தாக்குதல் தொடுத்து கலவர பூமி ஆக்கி வருகின்றனர்.

பாஜக., மாநிலத் தலைவர் நிவேதிதா, சபரிமலை பாதுகாப்புப் பேரணியைத் தலைமை தாங்கி நடத்தினார் என்ற காரணத்துக்காக, அவரைஇ நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளனர் போலீஸார். உடனடியாக அவர் 14 நாள் காவலில் வைக்கப் பட்டுள்ளார். இது கேரளத்தில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending