melmaruvathur adigalar - 2026

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் சாதனையாளர்கள் பலருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நடத்தி வரும் பங்காரு அடிகளாருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டது. அவருக்கு விருது அறிவித்த குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டது..

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,மதுரை சின்னபுள்ள , கண் மருத்துவர் டாக்டர்.R.V.ரமணி ,டாக்டர்.ராமசாமி வெங்கடசாமி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது மூலம் கவுரவித்த மேதகு @rashtrapatibhvn பிரதமர் திரு @narendramodi ஆகியோருக்கு எனது சார்பாகவும், @BJP4TamilNadu சார்பாகவும், தமிழகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் 6 ஆளுமைகளுக்கு உரிய அங்கீகாரம் தந்து கௌரவித்த பிரதமருக்கும், தேர்வுக்குழு உறுப்பினர் அனைவருக்கும் நன்றி… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending