Piyush Goyal - 2026

மத்திய அரசுக்கு இறுதி பட்ஜெட்டா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் அல்ல என்று கூறினார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் பியூஷ் கோயல்! அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக குரல் எழுப்பி, கோஷமிட்டு அவைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

பயங்கர கூச்சல் குழப்பங்களுக்கு இடையேதான் பட்ஜெட் உரையை வாசித்தார் பியூஷ் கோயல். இதுவே பாஜக.,வின் இறுதி பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன.

இந்நிலையில், இது மத்திய அரசுக்கு இறுதி பட்ஜெட்டா என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான்! எதிர்க்கட்சிகள் அல்ல என்று குறிப்பிட்டார் பியூஷ் கோயல்!

இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த பட்ஜெட் மோடி அரசு, ஏழைகள் மற்றும் விவசாயிகள் இளைஞர்கள் ஆகியோரின் கனவுகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் இதுகுறித்து குறிப்பிட்டபோது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 2018 19 நிதியாண்டில் ஒரு மாதம் முன்னதாக மார்ச்சில் ரூபாய் 2000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு டிரான்ஸ்பர் செய்யப்படும் அடுத்த நிதி ஆண்டான 2019- 20ல் விவசாயிகள் ரூபாய் 6 ஆயிரம் பெறுவர் என்று கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending