Govindaraja Swamy temple tirupati - 2026

திருப்பதி: திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிய அடிவாரக் கோயிலான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உத்ஸவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் காணாமல் போயுள்ளதாக புகார் அளிக்கப் பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீகோவிந்தராஜ ஸ்வாமி திருக்கோவில்! இங்கே உத்ஸவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகோவிந்தராஜ சுவாமிக்கு அணிவிக்கப் படும் 3 தங்க கிரீடங்கள் மாயமானதாக தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோயிலுக்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தொடந்து, காணாமல் போன தங்க கிரீடங்களை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கோயில் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending