kashmir blast - 2026

காஷ்மீரில் இன்று புலவாமா மாவட்டத்தில் இன்று நிகழ்த்தப் பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள்  கொல்லப் பட்டதற்கு பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது என பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் கோழைத்தனமான இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நாடே தோள் கொடுக்கும்…. என்று பதிவிட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending