கோலி ரன் எடுத்தால் அனுஷ்கா ‘மேன் ஆப்ஃத மேட்ச்’: ப்ரீதி ஜிந்தா

preity-zinta யாரெல்லாமோ ஆதரவுக் குரல் கொடுத்தாலும், சக நடிகையும், ஐபிஎல்லில் ஒரு அணியின் உரிமையாளருமான ஒருவரின் குரல் இப்போது அனுஷ்காவின் நெஞ்சைத் தொட்டுவிட்டது. விராட் கோலி நன்றாக விளையாடி ரன் அடித்தால், மேன் ஆஃப் த மேட்ச் அனுஷ்காவுக்குத்தான் என்று குரல் கொடுத்துள்ளார் பாலிவுட் நடைகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீதி ஜிந்தா. ஏற்கெனவே உலகக்கோப்பை போட்டியில் விளையாட ச் சென்ற கோலிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காக உடன் சென்றார் அனுஷ்கா சர்மா. முக்கியமான அரையிறுதிப் போட்டியில் கோலி சொதப்ப, அவருக்கு ரசிகர்களின் கண்டனைக் கணைகள் அனுஷ்காவை வசை பாடும் உருவில் வந்து சேர்ந்தன. இந்த நிலையில், உடனடியாக ஐபி எல் போட்டிகள் தொடங்கி விட்டன. இப்போது விராட் விளையாடுகிறார். எப்படி அவர் மோசமாக விளையாடியபோது, அனுஷ்கா காரணம் என்று எல்லாரும் அவரை விமர்சனம் செய்தார்களோ அப்போது, அவர் நன்றாக அடிக்கும் ஒவ்வொரு செஞ்சுரிக்கும் அனுஷ்கா பாராட்டைப் பெறுவது முறைதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ரீதி ஜிந்தா. மேலும், கோலி செஞ்சுரி அடித்தால், அனுஷ்கா மைதானத்தின் நடுவில் சென்று அவர் ரசிகர்களின் பாராட்டைப் பெறவேண்டும். அதற்கு அவர் தகுதியானவர் என்று கூறியுள்ளார் ப்ரீதி ஜிந்தா.