தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு உதவ கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க கேரள அரசு வழங்க உள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு குடிநீர் வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.