நிதிநெருக்கடியில் புதுவை அரசு! படித்த இளைஞர்கள் விரக்தி !

Published:

Graduate Program - 2026

புதுச்சேரி அரசில் 500க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது,

படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் மிகுந்த சோர்வை பெற்றுள்ளனர்.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக அமைச்சக ஊழியர்கள் திகழ்கின்றனர்.

இளநிலை எழுத்தர்கள், மேல்நிலை எழுத்தர்கள், உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என, 500க்கும் மேற்பட்ட நிரப்பப்படாத அமைச்சக பணியிடங்கள் காலியாக உள்ளன.

கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடாக் அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்துவிட்டு, காலியாக உள்ள இடங்களுக்கு பணி நியமனம்
செய்யப்படும் என, அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவிப்பதே, பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம் என, தகவல்கள் வெளியாகி
உள்ளது.

இத்தகைய சூழலில் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் போடுவதே சவாலான பணியாக உள்ளது. ஓய்வு
பெறுபவர்களுக்கு ஓய்வூதிய வசதிகளை வழங்குவதிலும் தொய்வு நிலவுகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

அரசு சார்பு நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இச்சூழ்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக, அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு யாரும் அக்கறையோ
ஆர்வமோ காட்டாத நிலைமை நிலவுகிறது.

இதனால், படித்து பட்டம் பெற்று, வேலைக்காக காத்திருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்

Related articles

Recent articles

spot_img