நெல்லையில் பெய்த பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று விலக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நவம்பர்,டிசம்பரில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணைகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
அணைகள் நீர்மட்டம் :
தற்போது ஜனவரியில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்துவருகிறது. நேற்றுமுன்தினம் 39 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணைக்கு ஆயிரத்து 141 கனஅடிவீதம் நீர்வரத்து உள்ளது.
39.90 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 46 அடியானது. அணைக்கு ஆயிரத்து 257 கனஅடிநீர்வரத்து உள்ளது. சேர்வலாறு அணை நீர் மட்டம், 75. 49 அடியாக உயர்ந்துள்ளது.
அருவிகளில் வெள்ளம்: குற்றால மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின்அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி ப்பட்டுள்ளது