
உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் சித்து விளையாட்டு. புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை முடிந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மனு அளித்துள்ளது.
புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்பட்ட பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதம் 12ஆம் தேதிக்குள் 13 அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் வேலூர் திருநெல்வேலி விழுப்புரம் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மட்டுமின்றி அவற்றிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் ராணிப்பேட்டை தென்காசி செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் முறையாக வார்டுகள் வரை பணிகளை செய்ய வேண்டும் அதன் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது
இந்த நிலையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
அவர் தனது ட்விட்டர் பதிவில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை … இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சி நிர்வாகம் மலரவேண்டும் என்று கூறியுள்ளார்.