தில்லியில் மீண்டும் தீ: அதே இடத்தில் நேர்ந்த சம்பவம்!

சற்றுமுன்
fire 1 - 2026

வடக்கு தில்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனா்.

ஏராளமானோர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

fire 1 1 - 2026

உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் தப்ப முடியவில்லை அப்பகுதியைச் சேர்ந்தவா்கள் தெரிவித்தனா்.

இத்தீவிபத்து தொடா்பாக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலையின் உரிமையாளா் ரெஹானை கைது செய்தனா். தில்லியில் இதுவரை நடைபெற்ற தீ விபத்துகளில் இரண்டாவது மோசமான தீ விபத்தாகும்.

இந்நிலையில், அனாஜ் மண்டியில் உள்ள அதே தொழிற்சாலையில் திங்கள்கிழமை மீண்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.