புதுக்கோட்டை: பலத்த இடி மின்னலுடன் மழை!

சற்றுமுன் தமிழகம்
idi minnal

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்தது, இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்தது, கடந்த சில நாட்களாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்த நிலையில் நேற்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

அதைப்போன்று நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினதின் சுற்று வட்டார பகுதிகளான மீமிசல், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, அப்போது பலத்த காற்றும் வீசி திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மேலும் இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வந்தது. கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.