IMG 20170815 WA0007 - 2026

தனக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி பார்சல் செய்து அனாதை
இல்லத்திற்கு ஒரு பெண் கொரியர் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில்
தாதாஎன்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் கொரியர் அலுவலகத்திற்கு ஒரு பார்சல்
வந்தது. அந்த பார்சலில் ஒரு அனாதை விடுதியின் முகவரிகொடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த பார்சலை கொரியர் பாய் எடுத்து கொண்டு சென்றார். அப்போது அந்த
பார்சலில் அசைவு ஏற்பட்டதுடன் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.

உடனே அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்து அந்த பார்சலை பிரித்து பார்த்தார். அதில்
பிறந்த பெண் குழந்தை இருந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் கூடினர்.பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த குழந்தை பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து இந்த செயலை செய்த குழந்தையின் தாயான 24 வயது பெண்ணை
கண்டுபிடித்தனர். இந்நிலையில் குழந்தையின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு
குழந்தையை வந்து பெற்று கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

சீனாவில் குழந்தையை வதைப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 5 வருடம் கடுங்காவல்
தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending