tasmac

தேனியில் டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த டாஸ்மாக் கடை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். நேற்று வழக்கம் போல கடை திறக்க வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் அவர், அருகில் அமர்ந்து, மற்றொரு ஊழியரை கடையை திறக்க வைத்தார். அதன்பின், அந்த கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி, கடையை தற்காலிகமாக மூடி, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, அவருடன் பணியாற்றிய சகா ஊளியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதுபிரியர்கள், அருகில் இருந்த மற்றொரு கடைக்கு சென்று மதுபானங்கள் வாங்கினார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending