kushbu

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் குஷ்பு. அதன் தொடர்ச்சியாக பாஜக நடத்தும் அத்தனை போராட்டத்திலும் கலந்து வருகிறார்.

தற்போது தடையை மீறி பாஜக நடத்தி வரும் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுராந்தகம் அருகே அவரின் கார் சென்று கொண்டிருந்த போது அவரை தாண்டி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி அவரின் காரை உரசி சென்றது. இதில், காரின் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது.

லாரி ஓட்டுனர் உடனடியாக காரை நிறுத்திவிட்டார். குஷ்பு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். அந்த கண்டெய்னர் ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தன் கணவர் கும்பிடும் முருகன் தான் தங்களை காப்பாற்றியதாக குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும், திட்டமிட்ட நோக்கத்தோடு அந்த லாரி ஓட்டுனர் வண்டியை ஓட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending