நீதிமன்றம் தீர்ப்பு கூறினாலும் பேஸ்புக் ஸ்டேடஸில் சமூக அக்கறை வேண்டும்: ஸ்டாலின் எச்சரிக்கை

Published:

சென்னை: நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தாலும், பேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்களை பதிவிடும் போது கவனமாக இருக்க வேண்டும்; நமக்கும் சமூக அக்கறை அவசியம் வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்: ”தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 ஏ-வை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள இன்றைய தினம் (நேற்று) இந்திய ஜனநாயகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நாள். சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்புவோரை கைது செய்யவும், மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த பிரிவு அதிகாரம் அளிக்கிறது. சமூக வலைத்தளங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த பிரிவு கொண்டு வரப்பட்டாலும், காவல்துறையும், அரசுகளும் இதை தவறாகவே பயன்படுத்தி வந்தன. சமூக வலைத்தளத்தில் கருத்து சுதந்திரத்தை முடக்கவும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை பறிக்கவுமே இந்த பிரிவு தவறான வழியில் பிரயோகிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிவந்துள்ள இந்த தீர்ப்பின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், கண்ணியமான மாற்று கருத்துக்களை தங்கள் அரசியல் செயல்பாடுகள் மீது தெரிவிக்கப்படும் விமர்சனங்களாக அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவும் பெரும் வாய்ப்பாக அமையும். ஆனாலும், சமூக வலைத்தளத்தை கவனமுடன் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால், நம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள பெரும் வாய்ப்பு வழங்கும் சமூக வலைத்தளங்களில் நாம் சொல்லும் கருத்து எவ்வளவு தாக்கத்தை சமுதாயத்தில் உருவாக்கும் என்று உணருவதும் நம் கடமை என்பதில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img