திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்!

IMG 20210803 WA0003
IMG 20210803 WA0003

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில், மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும்.
லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

இங்கு, ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த் திருவிழா இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொரோனா இரண்டாவது காரணமாக தமிழகத்தின் 1, 2, 3 ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு திருக்கோவிலில் அனுமதி இல்லை என தமிழக அரசின் உத்தரவையடுத்து, பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப் படவில்லை.

பட்டாசார்யர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடை முறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழாவில், ஐந்தாம் திருநாள் 7-ஆம் தேதியும், கருட சேவை 9-ஆம் தேதியும் நடைபெறும்.

முக்கிய நிகழ்வான, திரு ஆடிப்பூர தேரோட்டம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல், இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories