ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்கள் எண்ணங்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், செய்தியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பதாகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.