முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, கேப்டன் பதவியை இழந்தது மட்டுமின்றி ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடையும் விதிக்கப்பட்டார். இதனால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் அவரது காதலி டேனி வில்ஸ் அவர்களுக்கும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, நாட்டிற்கே அவப்பெயரை பெற்று தந்த ஸ்மித்தை திருமணம் செய்ய வேண்டாம் என டேனி வில்ஸ்க்கு கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்
வழக்கறிஞராக இருக்கும் டேனி வில்ஸ், ரசிகர்களின் கருத்துக்கு மரியாதை கொடுத்து திருமணத்தை நிறுத்துவாரா? அல்லது காதலனை கைப்பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்