ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஏபி டி வில்லியர்ஸ் பிடித்த கேட்ச் வைரலாகி வருகிறது. பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.
ஐதராபாத் அணி விளையாடிய போது, மொயின் அலி வீசிய பந்தை, அதிரடி வீரர் அலேக்ஸ் ஹால்ஸ் தூக்கி அடித்தார். சிக்சரை நோக்கி பாய்ந்த அந்த பந்தை, யாரும் நம்ப முடியாத வகையில், டி வில்லியர்ஸ் அந்தரத்தில் பறந்து ஒற்றைக் கையில் பிடித்து பிரம்மிப்பை ஏற்படுத்தினார்.
இந்த போட்டியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. 219 ரன்கள் எடு்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது .