பிரான்ஸ் கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதனை செய்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்த கார் பரிசோதனை செய்த படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய எம்பிவி காரை தயாரித்து வருவதாக ரெனால்ட் நிறுவனம் முன்பே அறிவித்திருந்ததை நாம் அறிவோம். ரெனால்ட் லோடி கார்கள் நமது மார்க்கெட்டில் பெரியளவில் சாதிக்கவில்லை. இதனால் புதிய எம்பிவி கார்களை வரும் 2019ம் ஆண்டில் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய மாடல் ரெனால்ட் CMF-A+ பிளாட்பார்மில் kwid hatchback-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது kwid-ஐ விட பெரியதாக இருப்பதுடன், பெரிய வீல்பேஸ்-ஐ யும் கொண்டுள்ளது. ஆனாலும் மொத்த நீளம் நான்கு மீட்டருக்குள் கொண்டதாக இருக்கும். இது சிறிய கார்களில் உள்ளதை போன்ற வசதிகளை பெற தகுதியுடையதாக மாற்றப்பட்டுள்ளது. புதிய ரெனால்ட் எம்பிவி கார்கள் மூன்று வரிசை கொண்ட இருக்கைகளுடன், ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் வெளியாக உள்ளது.
எம்பிவி சோதனை புகைப்படங்கள் அனைத்தும், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த படங்கள் மூலம் இந்த கார்கள் கோண வடிவமைப்பு கொண்டது என்பதை யூகிக்க முடிகிறது.