ஸ்டட்கார்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். ரோஜர் ஃபெடரர், கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் இருவரும் மோதிய இறுதி ஆட்டத்தில் ஃபெடரர் 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் கோப்பையை வென்றார்.
ஃபெடரர் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்க அவர், வரும் விம்பிள்டன் போட்டிக்கு முன்பு ஹாலே(Halle) பட்டம் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.