உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டி: தங்கம் வென்றார் தீபிகா குமாரி

உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி தங்கம் வென்றார். அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டி ஒன்றில் ஜெர்மனியின் மிட்செல் க்ரோப்பனை 7-க்கு 3 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.

இதன் மூலம் தீபிகா தங்க பதக்கம் வென்றார். இதற்கும் முன்பு 2012, 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வெள்ளி பதக்கம் வென்ற தீபிகா குமாரி தற்போது தங்க பதக்கம் வென்றுள்ளார்.