சென்னையில் இன்று நடைபெறவுள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க ஊழியர்கள் திரண்டு வருமாறு திருச்சி மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், முற்றுகை பேரணியில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் இருந்து ஊழியர்கள் புதன்கிழமை இரவே சென்னை புறப்பட வேண்டும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தந்த பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொண்டு வந்து சேரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.