பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியலை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டு உள்ளார்.

இந்த பட்டியலில் மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பெற்றுள்ளார். ரித்விக் 2வது இடமும், ஸ்ரீவர்ஷனி 3வது இடமும் பெற்றுள்ளனர். முதல் 10 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த ஆண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேரில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேருக்கு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த ஆண்டு பெறப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் பெறப்படும்.

தர வரிசை பட்டியலில் தவறு எதுவும் இருக்குமென்றால் அவற்றை திருத்தி கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும். மருத்துவ படிப்பிற்கு பின் பொறியியல் படிப்பு கலந்தாய்வு நடைபெறும்.