சென்னையில் கனவு விருது முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் புதுமைப்பள்ளிகள் கனவு ஆசிரியர் விருதை 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் என்ற இரு பெயரில், புதிதாக விருது வழங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, கட்டமைப்பு வசதிகள், கற்றல், கற்பித்தல் முறைகளில், புதுமை புகுத்தி வரும் அரசுப்பள்ளிகளை அடையாளப்படுத்தவும், ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இவ்விரு விருதுகளும் அமையும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. .