தஞ்சையில் இன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை மாநாடு தொடக்கம்

தஞ்சாவூரில் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து மாநாட்டு அமைப்புத் தலைவர் டி.வி.சாத்தப்பன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் எம்.ஆர்.மருத்துவமனையில் நேற்று 10க்கும் அதிகமான ஏழைக் குழந்தைகளுக்கு இந்திய அளவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில், குழந்தைகளுக்கான உதடு அண்ணப் பிளவு, சிறுநீரக் குழாயில் அடைப்பு, மலக்குடல் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.