ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ நேற்று புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இந்த நிலையில், சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே தன் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.