சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொள்வதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது ஆண்டு சம்பளத்தில் 20 சதவிகித்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.